New Updates! Fresh news just arrived.

டித்வா தயார்நிலை தொடர்பில் ஆராயும் குழுவுக்கு மேலும் கால ...

News

டித்வா தயார்நிலை தொடர்பில் ஆராயும் குழுவுக்கு மேலும் கால அவகாசம் நீட்டிப்பு!!

June 11, 2026 1:44 pm
டித்வா தயார்நிலை தொடர்பில் ஆராயும் குழுவுக்கு மேலும் கால அவகாசம் நீட்டிப்பு!!
டித்வா புயலுக்கு முகங்கொடுப்பதற்கான போதியளவான தயார்ப்படுத்தல்களை கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்றைய (11) பாராளுமன்ற அமர்வின் போது, இந்த விடயத்தை தெரிவித்தார்.

டித்வா புயலுக்கு முகங்கொடுப்பதற்கான போதியளவான தயார்ப்படுத்தல்களை கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் விசேட பாராளுமன்ற குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

எனினும் பாராளுமன்றின் அனுமதிக்கு அமைய நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அந்த அறிக்கையினை சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளதாக அந்த குழு அறியப்படுத்தியுள்ளது.

இதன்படி பாராளுமன்றின் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 102 இன் அடிப்படையில் குறித்த விசேட பாராளுமன்ற குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now