கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணை தீவிரம்: பாதாள உலகத்தலைவரிடம...
News
கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணை தீவிரம்: பாதாள உலகத்தலைவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, வெலிசர உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவரான சமிந்த ரவி ஜயநாத் என்ற ‘தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று (05) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கடந்த ஆண்டு புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கு எதிரான மூன்று வழக்குகளில் முன்னிலையாவதற்காக பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிறப்புப்பிரிவு குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு, புதுக்கடை, நீதிமன்றம் இலக்கம் 5 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கிருந்த மீதமுள்ளவர்கள் அகற்றப்பட்டு கதவுகள் மூடப்பட்டன.
இதற்கிடையில், சட்டத்தரணி போல் வேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி விசாரணைக் கூண்டில் இருந்த கணேமுல்ல சஞ்சீவவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, துப்பாக்கியை அவ்விடத்தில் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.