ஆயுர்வேத கடை என்னும் போர்வையில் 'கஞ்சா லேகியம்'...
News
ஆயுர்வேத கடை என்னும் போர்வையில் 'கஞ்சா லேகியம்' விற்பனை: இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது!
ஆயுர்வேத கடை என்னும் போர்வையில் கஞ்சா கலந்த லேகியத்தினை விற்பனை செய்து வந்த சந்தேக நபரினை நேற்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கலந்த லேகியமானது கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை நடவடிக்கையின் போது இந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரினுடைய வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்