New Updates! Fresh news just arrived.

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு விபத்து: பல்...

News

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு விபத்து: பல்கலைக்கழக மாணவி பரிதாபப் உயிரிழப்பு!

September 23, 2026 2:55 pm
ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு விபத்து: பல்கலைக்கழக மாணவி பரிதாபப் உயிரிழப்பு!
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலுகின்ற 26 வயதுடைய மாணவி உயிரிழந்துள்ளார்.

இதன்படி, நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியினை சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்னும் மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

தனது தந்தையோடு, மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பினை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் குறித்த்ட சோக விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியினுடைய ஆடை பின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதினால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்ர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் அடங்குவதோடு, அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளினை மேற்கொண்டடுள்ளதோடு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரியான அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் இச்சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளினை முன்னெடுத்தார்.

அத்தோடு, பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயத்தின் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்தோடு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now