இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோ...
News
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்!
இலங்கையில் உள்ள விவசாயக் கழிவுகள் அதிகமுள்ள பகுதிகளினை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையினை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, விவசாயத் துறைக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
பல்வேறு வழிகளில் எரிசக்தியினை உற்பத்தி செய்வது குறித்து நோர்வே தூதரக அதிகாரி இதன்போது கருத்துக்களினை முன்வைத்தார்.
காற்றுச் சக்தி, சூரியச் சக்தி மற்றும் கடலின் அலைச் சக்தி ஆகியவற்றினை பயன்படுத்தி எரிசக்தியினை உற்பத்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்தத்துடன், இது தொடர்பில் அவர்கள் தயாரித்த திட்ட அறிக்கையொன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் பகல் நேரங்களில் சூரிய சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதினை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட தூதரக அதிகாரி, குறித்த மேலதிக சூரிய சக்தியினை பயன்படுத்தி நீரைப் மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் ஊடாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற ஹைட்ரஜனை விவசாயத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும் ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.