அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிவாயுக்கள் தட்டுப்பாடு...
News
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிவாயுக்கள் தட்டுப்பாடு: நுகர்வோர் பெரும் சிரமம்!
நாடளாவிய ரீதியாக மீண்டும் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தினை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்திலுள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களினை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதினை காண முடிகின்றது.
மேலும், எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினாயால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுக்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் காரைதீவு,மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது மற்றும் பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களின் முன்பாக மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் சமையல் எரிவாயுவினை பெற்றுச் செல்கின்றனர்.
அதிலும் எதிர்வருகின்ற நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் எனவும் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களினை கொள்வனவு செய்ய நீண்ட நேரம் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர்.
மேலும், இவ்வாறு காத்திருந்து எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு, வீடு திரும்பும் நிலையும் தற்போது நிலவுகின்றது விநியோகம் குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளினை பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களிலிருந்து குறித்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதோடு, நகரத்திலுள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது.நிறுவனத்திலிருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதோடு, ஒரு சில நாட்களில் அது சீராகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் வழமையினை விடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாகவும் விநியோகஸ்தர்கள் கூறுகின்றார்கள் இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில பகுதிகளில் இன்னும் விநியோகிக்கப்படாமல் முடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது இரண்டு வகை சமையல் எரிவாயுகளிலொன்றினை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பாறுக் ஷிஹான்