New Updates! Fresh news just arrived.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விசேட பண்ட வரிகளைக் குற...

News

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விசேட பண்ட வரிகளைக் குறைக்கும் வர்த்தமானி வெளியீடு!

November 13, 2026 11:14 am
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விசேட பண்ட வரிகளைக் குறைக்கும் வர்த்தமானி வெளியீடு!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளை குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (12) வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நேற்று நள்ளிரவு முதல் இந்த வரிக் குறைப்பு அமுலுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபா வரி 10 ரூபாவாகவும், மாசி கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 202 ரூபா வரி 10 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத காய்ந்த மிளகாய் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியையும் 50 ரூபாவாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now