New Updates! Fresh news just arrived.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வெள...

News

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வெளியீடு!

February 4, 2026 2:40 pm
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வெளியீடு!
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளினை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி, ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) முறைமையானது நாளை (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி இம்மாதம் 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரைக்கும் குறித்த விண்ணப்பத்தினை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடம் இருந்தும் (ஆண், பெண் இருபாலாரும்) இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான இணையவழி முறைமையினை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியோடு நிறைவடையும்.

மேலதிக விபரங்களினை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினுடைய உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk திக்கு சென்று அதில் “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக குறித்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

மேலும், விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now