தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப...
News
தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர விடுத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.
தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தம்மை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளராகப் பணியாற்றுவதையும் நிமால் சிறிபால டி சில்வா தலைவராகப் பணியாற்றுவதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரியிருந்தார்.
அந்தக் கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னர் நிராகரித்திருந்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து தாம் கோரிய நிவாரணங்களை வழங்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இன்று அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிமால் சிறிபால டி சில்வா தலைவராகப் பணியாற்றுவதையும் துமிந்த திசாநாயக்க செயலாளராகப் பணியாற்றுவதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அத்துடன், இது தொடர்பான வழக்கின் முதன்மை விசாரணை 2027 ஜனவரி 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கை வருமாறு,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகத் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர விடுத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகத் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியை வகிப்பதையும் நிமால் சிறிபால டி சில்வா தலைவர் பதவியை வகிப்பதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை வழங்குமாறும் கோரி தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலும் அத்தகைய நிவாரணம் வழங்குவது நிராகரிக்கப்பட்டது.
இவ்வுத்தரவை நிராகரித்து தாம் கோரும் நிவாரணங்களை வழங்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நிமால் சிறிபால டி சில்வா தலைமைத்துவத்தை வகிப்பதைத் தடுப்பதற்கும் துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியின் பணிகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்குமான இடைக்காலத் தடையுத்தரவை வழங்க நீதிமன்றம் மறுத்ததுடன், முதன்மை வழக்கு விசாரணையை 2027 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு உத்தரவிட்டது.