மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு அல்-ஹிலால் பாடசாலைக்கு செஸ...
News
மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு அல்-ஹிலால் பாடசாலைக்கு செஸ், கரம் உபகரணங்கள் அன்பளிப்பு!
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் செஸ் மற்றும் கரம் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் அலுவலகத்தில் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போது 11 செஸ் பலகைகள், 2 கரம் பலகைகள் மற்றும் செஸ் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செஸ் கடிகாரம் என்பன பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
குறித்த அன்பளிப்பு, மாணவர்களிடையே தர்க்கரீதியான சிந்தனை, திட்டமிடும் திறன் மற்றும் கவனக்குவிப்பு, விளையாட்டு ஒழுக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் பெரும் பயனளிக்கும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இவ்வுபகரணங்களை வழங்குவதற்கு முன்னின்று ஆதரவளித்த பாடசாலையின் பழைய மாணவியின் தந்தையான நலன்விரும்பி மற்றும் இதற்கு பங்களிப்புச் செய்த அனைத்து பழைய மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் பழைய மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பு, பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முழுமையான ஆளுமை மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எச். லாபீர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், பழைய மாணவர்கள் சங்க செயலாளர், சுகாதாரமும் உடற்கல்வி பாட ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் , நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்