ஆபாச காணொளி காண்பித்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: தலைம...
News
ஆபாச காணொளி காண்பித்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் கைது!
ஆபாச காணொளி காண்பித்து சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திவிட்டு தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்பு கைதாகியுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2025-12-11 அன்று குறித்த சம்பவத்தினுடைய எதிரொலியாக 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளினை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களினையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடயம் யாவரும் அறிந்ததே. குறித்த சம்பவத்தோடு, தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய 3 சந்தேக நபர்களினையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தோடு, தொடர்பான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த தவணை நடைபெற்ற சூழலில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்களும் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமி 4 சந்தேக நபர்களினையும் அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டியதன் பின்னர் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த 12 வயதான சிறுமியினுடைய பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றிலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சி இருந்த 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதாகியா சந்தேக நபர் கல்முனை குடி பகுதியினை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்தநிலையில் இன்று உரு மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 2 ஆந் திகதி அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான் குறித்த வழக்கினை மறு தவனைக்கு ஒத்தி வைத்தார்.
அத்தோடு, முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க சிறுமியால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களினுடைய பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படும் பெயர்கள் ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களினை கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் எஞ்சிய சந்தேக நபர்களினை பல்வேறு தரவுகளினை பெற்று கைது செய்வதில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கைது நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரான டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு பல்வேறு தரவுகளினை சேகரித்து வைத்து எஞ்சிய 2 சந்தேக நபர்களினையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினுடைய 1929 தொலைபேசி இயக்கத்தின் ஊடாக அப்பகுதியிலிருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியினை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த சிறுமி தெரிவித்தார்.
இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளினை முதலில் ஆபாச படம் பார்த்து வன்புணர்வு செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளினை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் குறித்த செயலுக்கு சிறுமியினுடைய தாயார் உடந்தையாக இருந்து வந்திருந்தமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2025-12-11 அன்று தந்தையுட்பட 5 பேரினை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியிருந்த ஏனைய 3 சந்தேக நபர்களினையும் தேடி வந்தனர்.
குறித்த சம்பவத்தில் அச்சிறுமி இடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி முதலில் தந்தை கைது செய்யப்பட்டதோடு, பின்னர் சாய்ந்தமருது மாளிகைக்காடு சம்மாந்துறைப் பகுதியில் அச்சிறுமியினை பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த 04 பேர் கைது செய்யப்பட்திருந்தனர்.இவர்கள் 52 , 41, 24, 40 , வயதிற்குட்பட்ட பலதார திருமணம் செய்த சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் தந்தை தனது மகளினை சுமார் 05 மாத காலமாக பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டதுடன், இது தவிர குறித்த சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களினையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினுடைய பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா