New Updates! Fresh news just arrived.

ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்ற டிரம்பின் அறிவிப்பால் ...

News

ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்ற டிரம்பின் அறிவிப்பால் உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வு!

November 13, 2026 10:12 am
ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்ற டிரம்பின் அறிவிப்பால் உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வு!
ஈரானுடன் வொஷிங்டனுக்கு இனி எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளன.

"ஈரானுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் தேவையில்லை. அந்தக் காலம் மலையேறி நீண்ட நாட்களாகிவிட்டன," என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்தைத் தரவுகளின்படி, ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலை 10.3 சதவீதத்தால் உயர்ந்து, மெகாவாட்-மணி ஒன்றுக்கு 95.6 யூரோக்களாக ($105.7) பதிவானது. இதன் மூலம் வாராந்த அடிப்படையில் 2.15 சதவீத உயர்வை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் விலை 3.6 சதவீதத்தால் அதிகரித்து பீப்பாய் ஒன்று 96 டொலராக உயர்ந்த போதிலும், வாராந்த அடிப்படையில் விலைகள் 4.9 சதவீதம் குறைவாகவே காணப்பட்டன.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) ரக கச்சா எண்ணெய் விலை 2.9 சதவீதத்தால் உயர்ந்து பீப்பாய் ஒன்று 89 டொலராகப் பதிவானது. எனினும் வாராந்த அடிப்படையில் இது 4.5 சதவீதம் சரிவிலேயே உள்ளது.

ஈரானின் நிதிச் சொத்துக்களையும், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) கட்டுப்பாட்டையும் வொஷிங்டன் கைப்பற்றியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"அவர்களது நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் பணம் எங்களிடம் உள்ளது, அவர்களது நீரிணையும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது!" என அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய எரிபொருள் கப்பல் போக்குவரத்தின் மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவும் ஒரு மையமாக இருந்து வருவதுடன், அங்கு ஏற்படும் பதற்றங்கள் சர்வதேச எண்ணெய் சந்தைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now