New Updates! Fresh news just arrived.

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இரண்டாம் கட்டம்...

News

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இரண்டாம் கட்டம் குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு

April 20, 2026 3:08 pm
உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இரண்டாம் கட்டம்  குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு
போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது தொடர்பில் ஈரான் இன்னும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.

இன்று (20) மாலை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவொன்று பாகிஸ்தானுக்குச் செல்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடற்படை முற்றுகை என்று சொல்லப்படுபவை தொடர்வதாலும், போர்நிறுத்த மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் அதிகாரிகளுக்கு இல்லை என ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று நடைபெறுமா இல்லையா என்ற உறுதிப்படுத்தலுக்காக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் ஆவலுடன் காத்திருக்கிறது.

எதிர்வரும் புதன்கிழமையுடன் தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஒரு நிரந்தர உடன்படிக்கையை எட்டுவதற்காக பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் தீர்க்கமானதாகக் கருதப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now