ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலை! -...
News
ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த திறந்த பிடியாணையின் அடிப்படையில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவரை, நேற்று (04) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், 2018ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் அண்மையில் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து களுத்துறை, தீனியாவல பகுதியில் வைத்து ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.