அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு: பேருந்து ஓட்டுநர் ...
News
அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு: பேருந்து ஓட்டுநர் உட்பட நால்வர் கைது!
அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளினை திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரினை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையில் உள்ள கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரினுடைய தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியிலுள்ள மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விரிவான விசாரணைகளில், சங்கிலித் திருட்டில் ஈடுபட்டிருந்த முக்கிய சந்தேக நபர் குற்றச் செயல்களின் பின்னர் கொழும்பு - கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தமை தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த சந்தேக நபரை திங்கட்கிழமை (12) அம்பாறைப் பகுதிக்குத் திரும்பியதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 'அம்பாறையின்' விடுதிக்கு அருகில் வைத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கல்முனைத் தங்கக் கடையில் உருக்கப்பட்ட நிலையில் நகைகள் மீட்பு:
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்டிருந்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட சங்கிலிகளினை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செய்யப்பட்டிருந்த அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட இரண்டு சங்கிலிகளும் கல்முனையில் உள்ள பிரபல தங்கக் கடையொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமானது.
இதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் கல்முனைத் தங்கக் கடைக்குச் சென்று, உருக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இரண்டு சங்கிலிகளினையும் கைப்பற்றியதோடு, குறித்த கடையில் பணிபுரிந்த இருவரையும் கைது செய்தனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட தங்க நகைகளினுடைய சந்தைப் பெறுமதியான சுமார் ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களினையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பாறுக் ஷிஹான்