ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி :-மீண்டும் நடிக்க வரும்...
News
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி :-மீண்டும் நடிக்க வரும் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய், இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதனால், அவர் இனி திரைப்படங்களில் நடிப்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, 'ஜனநாயகன்' திரைப்படம்தான் தனது கடைசிப் படம் என்று விஜய் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
தொடர்ந்தும் அவரை திரையில் காண முடியாதா என்ற ஏக்கத்திலும் ரசிகர்கள் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விஜய் மீண்டும் கெமரா முன்பு தோன்ற இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட உள்ள விளம்பரம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த விளம்பரத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விளம்பரத்துக்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நடிகர் விஜய், அரசு விளம்பரத்தின் மூலம் மீண்டும் கெமரா முன்பு தோன்ற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.