New Updates! Fresh news just arrived.

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வ...

News

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 10, 2026 11:21 am
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள அறிவிப்பு
2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய பல் தொழில்நுட்பவியலாளர்கள் (Dental Technicians) உள்ளிட்ட அந்தத் துறையைச் சேர்ந்த புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய பல் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக்க விஜேமுனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பல் தொழில்நுட்ப பயிற்சி பெறுநர்களாக, இடை மருத்துவ சேவையில் (Paramedical Service) இரண்டு வருட கால பயிற்சியைப் பெறுவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 15 பேரில், பயிற்சியைப் பூர்த்தி செய்த 13 பேர் உள்ளிட்ட குழுவினருக்கு இதன்போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரச சேவையில் அத்தியாவசிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, அதற்குரிய உரிய நிபந்தனைகள் மற்றும் தகைமைகளின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now