அரச வேலை எதிர்பார்ப்போருக்கு நற்செய்தி; 120,000 புதிய நிய...
News
அரச வேலை எதிர்பார்ப்போருக்கு நற்செய்தி; 120,000 புதிய நியமனங்கள் – அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!
இந்த ஆண்டு 120,000க்கும் மேற்பட்டோர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டை கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய அரச சேவையை வலுப்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காகவே புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான பொருளாதார வலிமையை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரச சேவையில் இணையும் ஊழியர்கள் பதவியேற்கும் போது காணப்படும் உற்சாகத்துடனேயே ஓய்வுபெறும் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கை தொழில்நுட்ப சேவையின் மூன்றாம் தர தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கான 133 நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.