New Updates! Fresh news just arrived.

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கான மகிழ்ச்ச...

News

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

August 11, 2026 6:18 pm
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!
யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினுடைய (UNHCR) உதவியோடு மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களினை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக சிறப்பு ஏற்பாடுகளினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சட்டமா அதிபரினுடைய ஆலோசனைகளுக்கு அமைவாக, பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது:

2006-08-01 இற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்கள், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக தமது இலங்கை அடையாளத்தினை உறுதிப்படுத்திய பின்னர், அரசு புலனாய்வுச் சேவையிடம் இருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.

குறித்த நபர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தினுடைய விசேட ஏற்பாடுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களினை செய்யாதவர்கள் என்பதினை உறுதிப்படுத்திக் கொள்ளல்.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டினை வழங்கி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தர வாய்ப்பளித்தல்.

2006-08-01 தொடக்கம் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரைக்கும் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள், தூதரகத்தின் மூலம் அடையாளத்தினை உறுதிப்படுத்தி, புலனாய்வுச் சேவையினுடைய ஒப்புதலைப் பெற்ற பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளரினுடைய அதிகாரங்களின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டுக்குத் திரும்ப சந்தர்ப்பம் வழங்குதல்.

இருப்பினும், கொலை, தேசத்துரோகம் போன்ற பாரிய குற்றங்களோடு, தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படும் நபர்கள் மற்றும் துறைமுகங்களில் வைத்துத் தடுக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now