New Updates! Fresh news just arrived.

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

News

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

October 1, 2026 4:13 pm
கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதினை தடுக்கும் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவினை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றமானது நிராகரித்துள்ளது.

இதன்படி, குறித்த மனு தொடர்பான விடயங்களினை ஆராய்ந்ததன் பின்பு அதன் கட்டளையினை அறிவித்த, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாமினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now