நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங...
News
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் மேலும் ஆய்வு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் மேலும் ஆய்வு செய்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அதன்படி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நீதி அமைச்சகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் தகவல்களைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.