New Updates! Fresh news just arrived.

நாளை காலை முதல் நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள்...

News

நாளை காலை முதல் நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

March 30, 2026 5:57 pm
நாளை காலை முதல் நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு
எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய, தற்போது இடமாற்றங்களுக்காகப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருப்பமின்றி நாளை (31) காலை 08.00 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் நாளை (31) காலை வரை அவகாசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவசர சிகிச்சை நடவடிக்கைகள் வழமை போல் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now