New Updates! Fresh news just arrived.

கிபுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் பருத்திதுறைய...

News

கிபுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் பருத்திதுறையில் தீர்மானம்!

March 20, 2026 4:32 pm
கிபுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் பருத்திதுறையில் தீர்மானம்!
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கின்ற கிபுல் ஓயா திட்டத்தை கைவிட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இன பரம்பல் மற்றும் நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்படவிருக்கின்ற கிபுல் ஓயா திடடத்தை அரசாங்கம் கை விட வேண்டும் என்று சபை உறுப்பினர் குறிஞ்சி குமரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணைக்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குறித்த தீர்மானம் 16 வாக்குகளால் வெற்றிபெற்றது. குறித்த பிரேரணை பிரதேச சபையுடன் தொடர்புடைய விடயம் அல்ல என தெரிவிதி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 4 பேரும் எதிர்த்திருந்தனர்.

பருத்தித்துறை பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்கதீஸ் தலைமையில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மாவீரர் மற்றும் மக்களுக்கு அஞ்சலி செலுத்தி சபை அமர்வு ஆரம்பமானது.

இதில் தலைமை உரை ஆற்றிய தவிசாளர் சபை சார்ந்த விடயங்களை தவிசாளருடன் மட்டும் பேச வேண்டும் என்றும், அதை விட ஆலோசனைகளை சபை செயலாளரிடம் பெற முடியும் என்றும், எந்தவொரு பிரதேச சபை உறுப்பினரும் சபை உத்தியோகத்தரிடம் நேரடியாக பேச முடியாது என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சபையின் செலவுகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கான நிதி அனுமதிகள் சபையால் அனுமதி வழங்கப்பட்டது.
மக்களின் முறைப்பாடுகள் அதன் மேல் எடுக்க படட நடவடிக்கைகள் என்பன சபைக்கு அறிவிக்கப்படடத்துடன் சபையின் அனுமதிக்களும் பெறப்பட்டதுடன் வீதிகள் அபிவிருத்தி, மின் விளக்குகள் பொறுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now