New Updates! Fresh news just arrived.

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்: பிரதேச செயலாளர் கள...

News

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்: பிரதேச செயலாளர் கள விஜயம்!

July 28, 2026 3:47 pm
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்: பிரதேச செயலாளர் கள விஜயம்!
அரசாங்கத்தினுடைய தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளினை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளானது திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வையொட்டி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் மற்றும் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் அதன் ஈரப்பத அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.

இதன்படி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என். எம். மனாஸ் அவர்களினுடைய வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற குறித்த நடவடிக்கையின் போது, பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளினை அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.

இடைத்தரகர்களின் சுரண்டல்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தகுந்த நியாயமான விலையினை உறுதி செய்யவும் அரசாங்கம் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இதன்போது, நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி மிகவும் வெளிப்படைத் தன்மையோடு, நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச செயலாளர் கண்டிப்பான அறிவுறுத்தல்களினை வழங்கினார்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தகுதிவாய்ந்த தரமான நெல்லைக் கொண்டுவந்து ஒப்படைத்து நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகளிடம் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். எம். நளீர், நெல் சந்தைப்படுத்தல் சபையினுடைய (PMB) பிராந்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now