கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கட்டளையினை உடன...
News
கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கட்டளையினை உடன் நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவு!
கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் 2026 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைக்கமைய இதுவரை விடுவிக்கப்படாத உத்தியோகத்தர்களினை 20 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இது தொடர்பாக (17.03.2026) ந் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் மாதாந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
ஆளுநரின் உத்தரவின்படி, 03.03.2026 முதல் இடமாற்ற உத்தரவுகளில் உள்ள அனைத்து அலுவலர்கள்/பணியாளர்களையும் வரும் வெள்ளிக்கிழமை, 20.03.2026-க்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த உத்தரவை மீறினால், இலங்கை அரசாங்க தாசன விதி கோவை மற்றும் கிழக்கு மாகாண அரச ஒழுங்கு விதி (E.Code) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மேலும் வலியுறுத்தி உள்ளதாக ஆளுநரின் செயலாளர் பி. வாகேஷன், அறிவித்துள்ளார்.
நூருல் ஹுதா உமர்