New Updates! Fresh news just arrived.

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அம்பாறை மாவ...

News

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

August 9, 2026 11:17 am
நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அம்பாறை மாவட்ட  மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர். வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது.

பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள் மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.


இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now