கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிறுவர் சந்தை. - G...
News
கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிறுவர் சந்தை.
மாத்தளை கல்வி வலையத்துக்குட்பட்ட
கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் தொழில் முயற்சி, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் நடைமுறைப் பொருளாதார அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிறுவர் சந்தை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விற்பனை நிலையங்களை அமைத்திருந்தனர். உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பழவகைகள், குளிர்பானங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மாணவர்களால் விற்பனை செய்யப்பட்டன.
மாணவர்கள் பொருட்களைத் தயாரிப்பது முதல் அவற்றுக்கான விலையை நிர்ணயித்தல், விற்பனை செய்தல், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளுதல் மற்றும் வரவு–செலவுகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறைச் சூழலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது.
சிறுவர் சந்தையை பார்வையிடுவதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் அமைத்திருந்த விற்பனை நிலையங்களை பார்வையிட்ட அவர்கள், மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் பாராட்டி அவர்களை ஊக்குவித்தனர்.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே தன்னம்பிக்கை, குழுப்பணி, தலைமைத்துவம், தொடர்பாடல், திட்டமிடல், பண முகாமைத்துவம் மற்றும் தொழில் முயற்சி போன்ற பல்வேறு திறன்கள் வளர்க்கப்பட்டன.
கல்வி என்பது பாடப்புத்தக அறிவுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், மாணவர்களின் வாழ்க்கைத் திறன்களையும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் என்பதற்கு இச்சிறுவர் சந்தை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவித்தனர்.
கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாபெரும் சிறுவர் சந்தை, மாணவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணர்ந்ததுடன், கல்விக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாகவும் அமைந்தது.
இந் நிகழ்வு பாடசாலையின் பதில் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில் பாடசாலை உதவி அதிபர் அழகர் அவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(வி.தீபன்ராஜ் )