New Updates! Fresh news just arrived.

மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை ...

News

மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக கைவிடக்கோரி மாபெரும் மக்கள் போராட்டம்!

May 28, 2026 8:40 pm
மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக கைவிடக்கோரி மாபெரும் மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி,வேரவில்,வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி மண்ணின் மக்களுடைய வாழ்வியலைப் பாதிக்கின்ற அரச அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக கைவிட வலியுறுத்தி இன்று (28) வியாழக்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

வேரவில் பிரதேச வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்த மேற்படி மக்கள் போராட்டம் நடைபவணியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கிராஞ்சியில் நிறைவுற்றது.

ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்களுடைய பக்குபற்றுதலுடன் இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கிராம மக்களின் வாழ்வியல் மற்றம் வாழ்வாதாரத்தை அழிக்கும் காற்றாலைத் திட்டம்,கனிம மணல் அகழ்வுத் திட்டம் மற்றும் சுண்ணக்கல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்திருந்தனர்.

இதன்போது பொதுமக்கள் "அநுர அரசே பதில் சொல்,மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள் ,எமது நிலம் எமக்கு வேண்டும்,எமது வளம் எமக்கு வேண்டும்,தமிழர் வளங்களை சுரண்டாதே,இரண்டாயிரம் குடும்பங்களின் வாழ்வியலை சிதைக்காதே " போன்ற பதாகைகளை ஏந்தியவாறும்-கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் கிராம மக்களுடன் இந்து மற்றும் கத்தோலிக்க மத குருமார்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கைகோர்த்திருந்தனர்.

பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி,வேரவில்,வலைப்பாடு,பொன்னாவெளி மற்றும் பாலாவி கிராமத்தில் உள்ள சுமார் 2000மக்கள் காற்றாலை,கனமமணல் அகழ்வு மற்றும் சுண்ணக்கல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மிக நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சுபேசன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now