தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் – 2 சி...
News
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் – 2 சிறுவர்கள் பலி!
தெஹிவளை கவுடான, சிறிசகபோ வீதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரு பிள்ளைகளும் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 55 வயதான அவர்களின் தந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.