பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்: விச...
News
பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்: விசாரணைகள் ஆரம்பம்!
மாத்தறை, மிதிகம - குருபேபில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் பணி பிரிவில் கடமையாற்றும் அதிகாரியின் வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ரிவோல்வர் ரக துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மிதிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.