குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்: நீதிபதி தலைமையில் வ...
News
குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு!
மட்டக்களப்பு குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தைதினை நேற்று (17) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயமொன்றினை மேற்கொண்டு ஆராய்ந்தனர்.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்தினை முடித்துக்கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்த முஸ்லிம் பயணிகளினை விடுதலைப்புலிகள் இடை மறித்து குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்றையதினம் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் ஒரு பகுதியாக, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினுடைய நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பினுடைய சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரும் குருக்கள் மடத்திலுள்ள மனித புதைகுழி என சந்தேகத்திற்குள்ளாகி இருக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டனர்.
குறித்த சம்பந்தப்பட்ட இடம் தற்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த மனித புதைகுழி தொடர்பிலான முதல் கட்ட அகழ்வாய்வு பணிகள் எதிர்வருகின்ற மார்ச் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறவுள்ள அகழ்வாய்வினை முன்னிட்டு குறித்த விசேட கள விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்