குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: அதிகாரமளிக்கப்பட்ட உ...
News
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நியமனம்!
சர்ச்சையை உருவாக்கிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சார்பாக சட்டரீதியாகப் வழக்கினை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வமான சட்டத்தரணியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றில் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்ற குறித்த வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P) தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடனான விசேட கலந்தரையாடலானது சம்மேளனக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது வழக்கின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை மற்றும் ஏனைய முன்னெடுப்புகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் சமேளனத் தலைவரான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகக் குடும்ப உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் சம்மேளனப் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த குறித்த வழக்கினை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளினை மேற்கொண்டு, அன்று முதல் இன்று வரைக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவந்தவித பிரதிபலன்களையோ அல்லது பலாபலன்களையோ எதிர்பாராமல் தன்னார்வமாகச் செயற்பட்டு வருகின்ற சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நிகழ்வில் முதன்மை உரையாற்றினார்.
வழக்கினுடைய ஆரம்பகட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு அவர் தெளிவுபடுத்தியதோடு, அவர்களினுடைய சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களினை அளித்தார்.
குறித்த வழக்கோடு சத்தியக்கடதாசி ஊடாக இணைந்து கொண்டுள்ள பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களின் உறுப்பினர்கள், தம்மை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும், தமது நலன்களைப் பாதுகாத்துத் தொடர்ந்தும் வழக்கு நடவடிக்கைகளினை முன்னெடுப்பதற்கும் தமது சுய விருப்பின் அடிப்படையில் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் சத்தியவோலையினைச் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.
மேலும், இதற்கமைவாக, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பில் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளினையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமினாலும், அவரோடு இணைந்து அவரினால் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுகின்ற சட்டத்தரணிகளினாலும் மட்டுமே இனி வருகின்றகாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமையானது குறிப்பிடத்தக்கது
பாறுக் ஷிஹான்