ஞானசார தேரரை காவி உடையில் முன்னிலைப்படுத்துமாறு: அடிப்படை...
News
ஞானசார தேரரை காவி உடையில் முன்னிலைப்படுத்துமாறு: அடிப்படை உரிமை மனு தாக்கல்!
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரான பி. ஏ. ரத்னபால என்பவரால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, ஞானசார தேரரை சாதாரண ஆடைகளிலோ அல்லது சிறைச்சாலை சீருடையிலோ கைவிலங்கு மாட்டி ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலை விதிகளின் 156(2) ஆம் பிரிவின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறி, அவர்களின் உருவத்தைப் புகைப்படம் எடுப்பது, காணொளி பதிவு செய்வது, விநியோகிப்பது அல்லது அதற்கு அனுமதி அளிப்பதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.