பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – அமைச்சரவை வழங்கிய...
News
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – அமைச்சரவை வழங்கிய அனுமதி
அரச பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக தலா ஒரு சோடி காலணிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகள் கொள்வனவு செய்ய 3,000 ரூபாய் மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இது 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், தென், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மூலம் பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படும். அதேவேளை, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையில் இருந்து நேரடியாக காலணிகளை வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தை 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணை முடிவடைவதற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் மூலம் 8,36,571 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.