ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் சர்வதேச பயிற்சித் திட்டத்த...
News
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் சர்வதேச பயிற்சித் திட்டத்திற்கு ஹக்கானி மஜீத் தெரிவு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் (OHCHR) 'சுதேச மற்றும் சிறுபான்மையினர் பிரிவின்' மதிப்புமிக்க சர்வதேச பயிற்சித் திட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஹக்கானி மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் இளமாணி பட்டங்களைப் பெற்றுள்ளதோடு தற்போது இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வரும் இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தவிசாளர் மஜீத் அவர்களின் மகனாவார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் இந்த ஒரு மாத கால சிறப்புப் பயிற்சியில், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதிநிதிகளில் ஒருவராக இவர் பங்கேற்கவுள்ளார்.
இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஆற்றிய பணிகளின் அடிப்படையில் இவர் இத்திட்டத்திற்குத் தேர்வாகியுள்ளார்.
சர்வதேச அனுபவங்கள் மூலம் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னெடுக்க இப் பயிற்சி வழிவகுக்கும்.