‘ஹஸ்தி சேனா’ விசேட நடவடிக்கை: 20 இற்கும் மேற்பட்ட விலங்கு...
News
‘ஹஸ்தி சேனா’ விசேட நடவடிக்கை: 20 இற்கும் மேற்பட்ட விலங்குப் பொறிகள் மீட்பு!
வடமேல் வனஜீவராசிகள் வலயத்திற்குட்பட்ட தேசிய நாமல் உயனையைச் சூழவுள்ள காப்பகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஹஸ்தி சேனா’ விசேட நடவடிக்கையின் போது, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 இற்கும் மேற்பட்ட விலங்குப் பொறிகள் இலங்கை இராணுவத்தினராலும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினராலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யானைகளின் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெதிகே தலைமையின்கீழ் இலங்கை இராணுவம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இணைந்து இன்று (03) இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்தன.
இந்த விசேட நடவடிக்கையில் 21 ஆவது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் கமிந்த சில்வா, 212 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பஸ்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கர்னல் அபேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.