அரச மருத்துவர்கள் சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமை...
News
அரச மருத்துவர்கள் சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமைச்சர்: சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு
மத்திய கிழக்கு போர் நிலைமைக்கு மத்தியில் நாட்டிலும் மக்கள் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் போதே அரச மருத்துவர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார சேவைக்கு புதிதாக இணைந்துள்ள இளம் மருத்துவர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பின்னரான மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், இந்த மருத்துவ நியமனங்களுக்காக விண்ணப்பித்திருந்த 436 பேரும் முதல் முறையாக நியமிக்கப்படுவதால் இதற்கு இடமாற்று சபைக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, அவர்கள் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட அரச மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியில் இணையவுள்ளனர்.
இந்த நிலையில், புதிய மருத்துவர்கள் தங்களுடைய இடமாற்றங்களை ஏற்றுக்கொண்டு சேவையில் இணையும் போது, அதனை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது பொருத்தமற்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கு முகம் கொடுப்ப தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன், புதிய மருத்துவர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாமல் சேவையில் இணைந்துக் கொள்ளுமாறும் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சேவையில் இணையும் யாரும் தங்களுடைய பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறையின் ஊடாக உரிய பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.