New Updates! Fresh news just arrived.

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்: க...

News

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்: கொழும்பு சென்ற பணிப்பாளர்!

June 10, 2026 7:35 pm
ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்: கொழும்பு சென்ற பணிப்பாளர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுடைய சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானது விடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று (10) ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த குறித்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் தமது போராட்டங்களை செய்தனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையினுடைய சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றுகின்ற தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் பேசுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்றையதினம் கொழும்பு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now