New Updates! Fresh news just arrived.

ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்...

News

ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

July 4, 2026 1:55 pm
ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் ஜூன் மாத இறுதியில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

காலநிலை மாற்றத்தினாலே இந்த அதீத வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மட்டுமே 2,025 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அயிலும் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 22–28 காலகட்டத்தில் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் 91 வீதமாக அதிகரித்துள்ளன.

பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நெதர்லாந்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு 480 இற்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now