மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச...
News
மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச்சரிக்கை!
மகாவலி கங்கைப் படுகையினை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மகாவலி கங்கையினுடைய மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கையினை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் குறித்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊடாகச் செல்லும் வீதிகளினை பயன்படுத்தும் சாரதிகள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு, செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளினை எடுக்குமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.