New Updates! Fresh news just arrived.

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

News

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

October 24, 2026 7:31 pm
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அப்பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் சேர்ந்து மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்க வாய்ப்புள்ளது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now