இன்று நாட்டின் சில பகுதிகளில் கனமழை!
News
இன்று நாட்டின் சில பகுதிகளில் கனமழை!
இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் தென், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் இன்று (28) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் உள்ளிட்ட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் நேரடியாகத் தலைக்கு மேலாகத் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.