New Updates! Fresh news just arrived.

அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல்: 30 பேர் பலி! -...

News

அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல்: 30 பேர் பலி!

January 28, 2026 12:45 am
அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல்: 30 பேர் பலி!
அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

குறித்த பனிப்புயலின் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பல விமான நிலையங்களில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாகப் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்புக் கருதிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் இந்தப் பனிப்புயலால் பல நகரங்கள் உறைபனியில் மூழ்கியுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now