New Updates! Fresh news just arrived.

IMF உடன் மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அதிக சாத்திய...

News

IMF உடன் மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள்

November 13, 2026 9:32 am
IMF உடன் மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள்
இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (12) இரவு ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி: சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான தேவை மற்றும் கையிருப்புகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகத் தாங்கள் உள்ளிட்ட குழுவொன்றுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தற்போதைய நிலை என்ன? எவ்வாறானதொரு விடயத்தை இலங்கையர்கள் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்?

பதில்: "இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து குழு இன்னும் கூடவில்லை. நாம் ஆராய வேண்டியது என்னவென்றால், 17 ஆவது வேலைத்திட்டத்தை நாம் மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்யும்போது, எமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா? தற்போது அங்கு இருந்த பொறுப்பை விடவும் வித்தியாசமானதொரு பொறுப்பே உள்ளது. முன்னர் இருந்தது ஸ்திரத்தன்மையை அடைவது. இப்போது நாம் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிறோம். அந்தப் பாய்ச்சலுக்குத் தயாராகும்போது, விசேட வேலைத்திட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றுவோம்.

ஆனால், இந்தப் பாய்ச்சலுக்குத் தயாராகும்போது, எமது தேவைகளைக் கருத்திற்கொண்டு, நாம் ஆராய்ந்து பார்த்து, எதிர்வரும் நாட்களில் நாம் கூடியதன் பின்னர் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே விடயங்களை முன்வைக்க முடியும். அதனையும் நாம் முன்வைப்போம். அவ்வாறில்லாவிடின், தற்போதைய சூழ்நிலையில் எது மிகவும் பொருத்தமானது என்பதை எமது அறிக்கையின் மூலம் முன்வைக்க எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர், இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சரவையே தீர்மானம் எடுக்க வேண்டும்." என்றார்.

கேள்வி: இப்போது இவ்வாறானதொரு குழுவை நியமித்ததன் மூலமே, அதுவொரு தேவையாகவே வெளிப்படுகிறது என நான் நினைக்கிறேன். நான் ஆரூடம் கூறுபவன் அல்ல. ஆயினும், பெரும்பாலும் இலங்கை மற்றுமொரு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன், ஏதேனும் ஒரு வேலைத்திட்டத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது, நான் ஆங்கிலத்தில் கூறுவதானால் "சாத்தியமானது" (possible) என்று கூறலாமா?

பதில்: "அப்படியானால், அவர் கூறும் விதத்தில் அது 'சாத்தியமானது' (possible) எனக் கூறலாம். அதாவது அதற்கான 'நிகழ்தகவு' (probability) உள்ளது." என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now