New Updates! Fresh news just arrived.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த டொலர் விலை : இலங்கை ரூபாய்க்கு...

News

மீண்டும் அதிரடியாக உயர்ந்த டொலர் விலை : இலங்கை ரூபாய்க்கு மீண்டும் வந்த சோதனை!

May 19, 2026 1:37 pm
மீண்டும் அதிரடியாக உயர்ந்த டொலர் விலை : இலங்கை ரூபாய்க்கு மீண்டும் வந்த சோதனை!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 338.07 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றங்கள், இறக்குமதி தேவைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் தாக்கத்தால் நாணய மாற்று விகிதங்களில் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன என பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now