வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்...
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கை – ருமேனியா இடையே உயர்மட்ட பேச்சு!
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இன்று (23) ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் திரு. பொக்டன் டெஸ்பெஸ்கு (Bogdan Despescu) அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இப்பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பாதுகாப்பான மற்றும் முறையான தொழிலாளர் இடம்பெயர்வை ஊக்குவித்தல், ருமேனியாவில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
தற்போது 28,304 இலங்கையர்கள் ருமேனியாவில் தொழில்புரிந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியதுடன், ருமேனிய பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் அவர்கள் வழங்கிவரும் பெறுமதிமிக்க பங்களிப்பையும் பாராட்டினர்.
இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுரண்டல்களைத் தடுத்தல் மற்றும் நியாயமான, வெளிப்படையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக குடிவரவு, சட்ட அமுலாக்கம், தொழிலாளர் மற்றும் தூதரகத் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற ஆட்சேர்ப்பு இடைத்தரகர்களுக்கு எதிராக அரசாங்கம் கடைப்பிடிக்கும் சகிப்புத்தன்மையற்ற உறுதியான கொள்கையை பிரதி அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கையின் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டம் குறித்தும் விளக்கமளித்த பிரதி அமைச்சர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் மற்றும் வலையமைப்புகளை அடையாளம் காணுதல், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் நடைமுறையிலுள்ள சட்ட வழிமுறைகளுக்கமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ருமேனிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பைக் கோரினார்.
மேலும், நாடுகடந்த குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் தொடர்பான முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) முன்னெடுத்துச் செல்லுதல், காவல்துறை ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி, தொழில்சார் பயிற்சி மற்றும் நிறுவனங்களின் திறன் மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைப் பிரஜைகளுக்குத் துரிதமான உதவிகளையும் பயனுள்ள பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
பாதுகாப்பானதும் கண்ணியமானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், தொழிலாளர்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்பன அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாகும் எனப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளை இரு நாட்டு மக்களுக்கும் நடைமுறை ரீதியான நன்மைகளை வழங்கும் செயற்றிட்டங்களாக மாற்றி, இலங்கை–ருமேனியா உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
ருமேனியத் தூதுக்குழுவில் அந்நாட்டு எல்லைக் காவல்துறையின் தலைமை அதிகாரி திரு. கோர்னெல்-லோரியன் ஸ்டொய்கா (Cornel-Laurian Stoica), ஐரோப்பிய விவகாரங்கள், ஷெங்கன் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் நாயகம் திருமதி நுஷா மிரேலா கோமான் (Nușa Mirela Coman) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதுக்குழுவில் ருமேனியாவுக்கான இலங்கைத் தூதுவர் சமந்த பத்திரண (Samantha Pathirana), வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திலானி வீரக்கோன் (Dilani Weerakoon), புக்கரெஸ்ட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் பிரார்த்தனா கௌசல்யா கோவிந்த (Prarthana Kaushalya Govinda) ஆகியோரும் பங்கேற்றனர்.