New Updates! Fresh news just arrived.

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்...

News

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

January 5, 2026 8:44 pm
உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளினை நடாத்துதல், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளினை நடாத்துதல், மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களினை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் மற்றும் பரீட்சை வினாத்தாள்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களினை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல் என்பனவும் இவ்வாறு தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களமானது குறிப்பிட்டுள்ளது.

மேலிம், எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனம் குறித்த உத்தரவுகளினை மீறிச் செயற்படுவார்களாயின், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவார்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளினை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை 2362 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now