New Updates! Fresh news just arrived.

திம்பிரிகஸ்யாயவில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி -...

News

திம்பிரிகஸ்யாயவில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி

November 7, 2026 11:41 am
திம்பிரிகஸ்யாயவில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி
இன்று (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய திம்பிரிகஸ்யாய பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 146.6 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மட்டக்குளிய பகுதியில் 125.5 மி.மீ மழைவீழ்ச்சியும், போபகம பகுதியில் 117.6 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now