New Updates! Fresh news just arrived.

வெள்ளப் பெருக்கால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்...

News

வெள்ளப் பெருக்கால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நாளை விடுமுறை

October 1, 2026 10:43 pm
வெள்ளப் பெருக்கால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நாளை விடுமுறை
இன்று (01) பிற்பகல் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லிந்துலை நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை (02) வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணராஜா தெரிவிக்கையில், இன்று (01) பிற்பகல் பெய்த கனமழையினால் பாடசாலை வளாகம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்து சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு பாடசாலையைத் தற்காலிகமாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், நுவரெலியா கல்வி வலயப் பணிப்பாளருடன் கலந்துரையாடியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், சுகாதார நடைமுறைகளுக்கேற்ப பாடசாலையை முழுமையாகச் சுத்திகரித்த பின்னரே மீண்டும் வழக்கம்போல் பாடசாலை திறக்கப்படும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையின் போது பாடசாலை வளாகத்தினுள் மழை நீருடன் சேறும் சகதியும் சேர்வதைத் தடுக்க, அப்பகுதியில் முறையான கால்வாய் அமைப்பை ஏற்படுத்தித் தருமாறும் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now