New Updates! Fresh news just arrived.

ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில...

News

ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்!

October 29, 2026 7:43 pm
ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்!
பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரண - பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now